தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 12 July 2021 8:10 PM IST (Updated: 12 July 2021 8:10 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் குடும்ப தகராறு காரணமாக தொழிலாளி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேனி : 

தேனி மாவட்டம் கூடலூர் ராஜீவ் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 54). கூலித்தொழிலாளி. இவரது மனைவி லதா. நேற்று முன்தினம் வீட்டில் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் கோபித்து கொண்டு ரவி வீட்டை விட்டு நேற்று முன்தினம் இரவு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. 

இந்நிலையில் நேற்று காலை அதே பகுதியில் 18-ம் கால்வாய் அருகே உள்ள புளியமரத்தில் ரவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story