கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் வாலிபரை நாட்டுத்துப்பாக்கியால் சுட்ட கட்டிட ஒப்பந்ததாரர் கைது
மாரண்டஅள்ளி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் வாலிபரை நாட்டுத்துப்பாக்கியால் சுட்ட கட்டிட ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்தனர்.
பாலக்கோடு:
மாரண்டஅள்ளி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் வாலிபரை நாட்டுத்துப்பாக்கியால் சுட்ட கட்டிட ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்தனர்.
வாலிபர் காயம்
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே தொட்டபடகாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 45). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி சுசிலா (39). இவர்களது மகன் தினேஷ்குமார் (21). இவர் கடந்த மாதம் 11-ந்தேதி இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர், வாலிபரை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் வாலிபருக்கு கால் மற்றும் வயிற்று பகுதிகளில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். அப்போது அதே ஊரை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் விஜயகாந்த் (38) என்பவர், வாலிபரை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான விஜயகாந்தை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
ஒப்பந்ததாரர் கைது
இந்தநிலையில் விஜயகாந்த் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருப்பதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று விஜயகாந்தை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
தனக்கும், தினேஷ்குமாரின் தாயார் சுசிலாவுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது. எங்களது கள்ளக்காதலுக்கு தினேஷ்குமார் இடையூறாக இருந்தார். இதனால் அவரை தீர்த்தக்கட்ட முடிவு செய்தேன். சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கி கொண்டு இருந்த தினேஷ்குமாரை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடி விட்டேன். விழுப்புரத்தில் பதுங்கி இருந்த தன்னை போலீசார் கைது செய்து விட்டனர் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story