சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 4 பேர் கைது


சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 12 July 2021 9:56 PM IST (Updated: 12 July 2021 9:56 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 4 பேர் கைது

சங்கராபுரம்

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், இளங்கோ ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது விரியூர் சுடுகாடு பகுதியில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த சின்னப்பன்(வயது 32), ஏரிக்கரை பகுதியில் சாராயம் விற்ற இருதயராஜ்(40), அய்யாக்கண்ணு (65), தியாகராஜபுரம் ஏரிக்கரையில் சாராயம் விற்ற சேரப்பாட்டு கிராமத்தை சேர்ந்த கார்த்தி(23) ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 250 லிட்டர் சாராயம், ரூ.1,150-ஐ பறிமுதல் செய்தனர்.


Next Story