அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா டிக்கெட் வினியோகம்


அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா டிக்கெட் வினியோகம்
x
தினத்தந்தி 12 July 2021 10:01 PM IST (Updated: 12 July 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

பெண்களுக்கு கட்டணமில்லா டிக்கெட் வினியோகம்

வேலூர்

வேலூர் போக்குவரத்து மண்டலத்துக்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து 227 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் அரசின் அறிவிப்பின்படி பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடன் பயணிக்கும் ஒருவர் ஆகியோர் கட்டணம் இல்லாமல் பயணம் செய்து வருகிறார்கள். டவுன் பஸ்களில் கட்டணமில்லாமல் எத்தனை நபர்கள் பயணம் செய்கிறார்கள் என்பதை கணக்கெடுக்கும் விதமாக விரைவில் அவர்களுக்கு கட்டணமில்லா டிக்கெட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று வேலூர் மண்டலத்தில் இருந்து இயங்கிய டவுன் பஸ்களில் பயணம் செய்த பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், அவர்களுடன் பயணித்த ஒருவர் ஆகியோருக்கு கட்டணமில்லாத டிக்கெட் வழங்கப்பட்டது. அதில், கட்டணமில்லா பயணசீட்டு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Next Story