மருத்துவம், செவிலியர் பயிற்சி படிப்பில் சேர 5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க சவரத்தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு


மருத்துவம், செவிலியர் பயிற்சி படிப்பில் சேர 5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க  சவரத்தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 12 July 2021 4:33 PM GMT (Updated: 12 July 2021 4:33 PM GMT)

மருத்துவம், செவிலியர் பயிற்சி படிப்பில் சேர 5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க சவரத்தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு

திருப்பூர்,
மருத்துவம், செவிலியர் பயிற்சி படிப்பில் சேர 5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சவரத்தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
சவரத் தொழிலாளர்கள்
தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் ஜீவமதி மற்றும் நிர்வாகிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாநகர் மாவட்ட பகுதியில் சலூன் கடைகள் வைத்துள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட தனி முகாம் அமைத்து கொடுக்க வேண்டும். முடிதிருத்துவோர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள சங்க உறுப்பினர்களுக்கு கிடைக்கவேண்டிய நல உதவிகளை காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். கடந்த ஆட்சியில் அரசு அறிவித்த நிவாரண உதவித்தொகை ரூ.2 ஆயிரம் கொடுக்கப்படாமல் உள்ளது. அதை வழங்க வேண்டும்.
வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கட்டப்படும் வீடுகளில் எங்கள் உறுப்பினர்களுக்கு வீடு வழங்கி உதவ வேண்டும். எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்.
5 சதவீத உள் ஒதுக்கீடு
மருத்துவ கல்லூரிகளிலும், செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளிலும் சேர இட ஒதுக்கீட்டில் 5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். மாவட்டம் தோறும் அமைய உள்ள பெரியார் சமத்துவபுரங்களில் முடி திருத்தும் தொழில் செய்யும் மருத்துவ நாவிதர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு வீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த மனுவைதமிழக முதல்-அமைச்சருக்கும் மனு அனுப்பி உள்ளனர்.

Next Story