சமூக இடைவெளியை மறந்த மக்கள்


சமூக இடைவெளியை மறந்த மக்கள்
x
தினத்தந்தி 12 July 2021 10:03 PM IST (Updated: 12 July 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி இ-சேவை மையத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக நின்றனர். இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

கோத்தகிரி,

கோத்தகிரி இ-சேவை மையத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக நின்றனர். இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

இ-சேவை மையம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாசில்தார் அலுவலக 2-வது தளத்தில் அரசு இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு வருமானம், இருப்பிடம், சாதி, வருமானம் உள்பட அரசின் பல்வேறு சான்றிதழ்களை பெற பொதுமக்கள் வந்து செல்கின்றனர். 

மேலும் ஆதார் கார்டு எடுக்கவும், அதில் மாற்றங்கள் செய்யவும் வருகின்றனர். இதனால் அங்கு பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வந்தது.  இதற்கிடையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் அரசு இ-சேவை மையம் மூடி கிடந்தது.

மக்கள் கூட்டம்

இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதன் காரணமாக சுமார் 2 மாதங்களுக்கு பிறகு அரசு இ-சேவை மையம் திறக்கப்பட்டன. இதனால் அங்கு பல்வேறு சான்றிதழ்கள் பெற பொதுமக்கள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர்.

இதனால் அங்கு மக்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. ஆனால் அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது இல்லை. இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

சமூக இடைவெளி

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- தாசில்தார் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு இ-சேவை மையத்தில் பொதுமக்களுக்கு தினமும் டோக்கன்கள் வழங்கப்பட்டு, ஒரு சமயத்தில் தலா 2 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். 

ஆனால் மீதமுள்ள பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து, அலுவலகம் முன்பு கும்பலாக காத்திருந்து வருகின்றனர். இதனால் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது. எனவே அரசு இ-சேவை மையத்தின் முன்பு சமூக இடைவெளி குறியீடு போட்டு, அதை அவர்கள் கடைபிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story