திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்


திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 July 2021 10:06 PM IST (Updated: 12 July 2021 10:06 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை.13-
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு  நடைபெற்றது. பல்லடம் நல்லூர் பாளையத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ராமாத்தாளுக்கு நீதி வழங்க வேண்டும். அவரை தாக்கியவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். 6 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும். ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் ஊருக்கு நடுவே தனியாருக்கு பாதை வழங்கக்கூடாது என்ற கோரிக்கை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைத்தலைவர் துரைவளவன் தலைமை தாங்கினார். ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை நிறுவனர் பவுத்தன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கோரிக்கை மனுவை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்தனர்.

Next Story