மதுக்கடையை அகற்ற கலெக்டரிடம் மனு


மதுக்கடையை அகற்ற கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 12 July 2021 10:07 PM IST (Updated: 12 July 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

மதுக்கடையை அகற்ற கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

ராமநாதபுரம், 
திருவாடானை தாலுகா வட்டாணம் ஊராட்சிக்கு உட்பட்ட தாமோதரன்பட்டினம் கிராமத்தை சேர்ந்த ஊராட்சி துணை தலைவர் அய்யப்பன் தலைமையில் ஏராளமான ஆண்களும் பெண்களும் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு திரளாக வந்து மனு அளித் தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடையால் நாள்தோறும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக மதுவிற்பனை அரசால் அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர கூடுதலாக பல மணி நேரம் திறந்து விற்பனை நடை பெற்று வருகிறது. மதுக்கடை அமைந்துள்ள இடத்தின் அருகில் உள்ள ஊருணியில்தான் கிராம பெண்கள் அனைவரும் காலை, மாலை நேரங்களில் குளிக்க செல்வது வழக்கம். இவ்வாறு குளிக்க செல்லும் போது மதுக்கடைக்கு வருபவர்களால் பல்வேறு பிரச்சினைகள் வருகின்றன. இதனால் பெண்கள் சொல்ல முடியாத வேதனை அடைந்து வருகின்றனர். இந்த மதுக்கடையை அகற்றக்கோரி பல முறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மாறாக கூடுதல் நேரம் மதுவிற்பனை நடந்துவருகிறது. எனவே, எங்கள் கிராமத்தின் நலன் கருதி குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு கருதி இந்த மதுக்கடையை உடனடியாக அகற்றித்தர வேண்டும். 
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

Next Story