கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி


கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி
x
தினத்தந்தி 12 July 2021 10:16 PM IST (Updated: 12 July 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலியானார்.

பரமக்குடி, 
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது42). இவர் பரமக்குடி காந்தி காலனியில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து மீண்டும் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது பரமக்குடி அருகே சூடியூர் மண் சாலையில் நின்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் கருப்புசாமியின் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி பிரியா கொடுத்த புகாரின்பேரில் கார் டிரைவர் திருச்சுழி தாலுகா குச்சேனரிபட்டியை சேர்ந்த பிரசாந்த் (27) என்பவரை கைது செய்து பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story