கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சாலையோர வியாபாரிகள் முனையம் சார்பில் 2014 மத்திய சட்டப்படி சாலையோர வியாபாரிகளுக்கு பாதுகாப்பு கோரியும், பயோமெட்ரிக் அடையாள அட்டை வழங்க கோரியும், வியபாரம் செய்து வந்த இடத்திலேயே மீண்டும் அனுமதி வழங்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா அமைப்பாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர் சேகர் முன்னிலை வகித்தார் ஆர்ப்பாட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி. மாநில தலைவர் எஸ்.ஆர். தேவதாஸ் தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கு வங்கிக் கடனை வழங்குவதையும் கந்துவட்டி கொடுமைகளை தடுக்க கோரியும் உள்ளாட்சி அமைப்பு மூலம் டெண்டர் விட்டு வசூலிப்பதை ரத்து செய்யக் கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள். இதில், மாவட்ட துணை அமைப்பாளர் ரபிக்கான், செங்கனி, இர்பான் உட்பட பலர் பேசினர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அமர்குஷ்வாஹாவிடம் மனு அளித்தனர்.
---
Image1 File Name : 5026841.jpg
----
Reporter : S. RAJESHKUMAR Location : Vellore - KANTHILI
Related Tags :
Next Story