மீன் கடைக்குள் புகுந்த கருநாகப்பாம்பு
தேனி அருகே மீன் கடைக்குள் கருநாகப்பாம்பு ஒன்று புகுந்தது.
தேனி:
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் தமிழ்நாடு நீர்வள, நிலவளத்துறையின் சார்பில் மீன் விற்பனை கடை உள்ளது. இந்த கடைக்கு நேற்று தொழிலாளர்கள் வந்த போது கடைக்குள் ஒரு கருநாகப் பாம்பு இருந்தது.
அதைப் பார்த்து மிரண்டு போன தொழிலாளர்கள் பதறியடித்து வெளியே ஓடி வந்தனர். பின்னர் இதுகுறித்து அதே ஊரைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான கண்ணன் என்பவருக்கு அங்கிருந்தவர்கள் தகவல் கொடுத்தனர்.
உடனே அங்கு வந்த கண்ணன், அந்த பாம்பை லாவகமாக பிடித்தார். அது சுமார் 7½ அடி நீளம் கொண்ட கருநாகப்பாம்பு. பிடிபட்ட பாம்பை வேடிக்கை பார்க்க அங்கிருந்தவர்கள் கூடினர். பின்னர் அவர், அந்த பாம்பை தேனி வீரப்ப அய்யனார் கோவில் மலைப்பகுதியில் கொண்டு சென்று விட்டார்.
Related Tags :
Next Story