சுயதொழில் தொடங்க அரசு மானியத்துடன் நிதியுதவி
வேலை வாய்ப்பற்றவரா, வேலை இல்லையா கவலையை விடுங்க சுயதொழில் தொடங்கி லாபம் சம்பாதிக்கலாம். சுயதொழில் தொடங்க அரசு மானியத்துடன் நிதியுதவி வழங்குகிறது. அந்த நிதியை பெற விண்ணப்பிப்பது குறித்து கலெக்டர் தகவல் தெரிவித்து உள்ளார்.
சிவகங்கை,
வேலை வாய்ப்பற்றவரா, வேலை இல்லையா கவலையை விடுங்க சுயதொழில் தொடங்கி லாபம் சம்பாதிக்கலாம். சுயதொழில் தொடங்க அரசு மானியத்துடன் நிதியுதவி வழங்குகிறது. அந்த நிதியை பெற விண்ணப்பிப்பது குறித்து கலெக்டர் தகவல் தெரிவித்து உள்ளார்.
ரூ.15 லட்சம் வரை வங்கி கடன்
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதற்காக தமிழக அரசால் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தின் கீழ் வியாபாரம் மற்றும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலும் மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.15 லட்சம் வரையிலும் வங்கி கடன் உதவி வழங்கப்படும்.
மேலும் திட்ட மதிப்பில் 25 சதவீதம் அதிகபட்சம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை அரசு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்திற்கு இந்நிதியாண்டிற்கு அரசு மானியமாக ரூ.65 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் இரண்டு பிரதிகளை உரிய ஆவணங்களுடன் மாவட்ட தொழில் மையத்தில் கொடுக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story