குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு சீல்
தேவகோட்டை அருகே தரச்சான்று இல்லாமல் இயங்கிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு சீல் வைத்து தாசில்தார் நடவடிக்கை எடுத்து உள்ளார்.
தேவகோட்டை,
தேவகோட்டையில் இருந்து அனுமந்தகுடி வழியாக விருசுழி ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றங்கரையோரம் நல்ல நீரூற்றுகள் உள்ளன. இந்த நீர் ஊற்றுகளை பயன்படுத்தி அரசிடம் எந்தவித அனுமதியும் பெறாமல் குடிநீரை பொதுமக்களுக்கு விற்பதாக தேவகோட்டை தாசில்தார் ராஜரத்தினத்துக்கு தகவல் கிடைத்தது.
அங்கு பள்ளிவாசல் தெருவில் வசித்து வரும் ராவுத்தர் நைனா முகம்மது மகன் சிரசுதீன் என்பவருக்கு சொந்தமான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்தனர். அப்போது அரசு அனுமதி பெறாமலும். இந்திய தரச்சான்று பெறாமலும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
தேவகோட்டை அருகே தரச்சான்று இல்லாமல் இயங்கிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு சீல் வைத்து தாசில்தார் நடவடிக்கை எடுத்து உள்ளார்.
தகவல்
இதை தொடர்ந்து அவர் மண்டல துணை தாசில்தார் அமுதா, கிராம நிர்வாக அதிகாரி ஜஸ்டின் ஆகியோருடன் அனுமந்தகுடிக்கு சென்றனர்.
சீல் வைப்பு
Related Tags :
Next Story