கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
முத்தண்ணன் குளக்கரையில் கட்டப்பட்ட கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை
முத்தண்ணன் குளக்கரையில் கட்டப்பட்ட கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முத்தண்ணன் குளம்
கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள முத்தண்ணன் குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 ஆயிரம் வீடுகள் இடிக்கப்பட்டன.
இந்த வீடுகளில் குடியிருந்தவர்களுக்கு மாற்று வீடுகள் ஒதுக்கப் பட்டன. அந்த வீடுகள் அனைத்தும் இடிக்கப்பட்டு அங்கு நடை பாதை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் போராட்டம்
இந்த குளக்கரையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிக்காக இந்த கோவிலை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவிலை இடிக்கப்போவதாக தகவல் பரவியதை தொடர்ந்து அந்த பகுதி பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story