தாந்தோணிமலையில் சேதமடைந்துள்ள வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு
தாந்தோணிமலையில் சேதமடைந்துள்ள வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை சீர் செய்யப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கரூர்
குடியிருப்பு வீடுகள்
கரூர் தாந்தோணிமலையில் வீட்டுவசதி வாரியத்தின் மூலம் அரசு ஊழியர்கள் குடியிருப்பதற்காக அடுக்கு மாடி வீடுகளுடன் கூடிய 108 குடியிருப்பு வீடுகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில், அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றனர்.
இவர்களின் குடிநீர் தேவைக்காக கட்டளை காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு தொட்டியில் நிரப்பி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தொட்டி சேதமடைந்து வரிசில் ஏற்பட்டதால் தண்ணீர் வரும்போது தொட்டியில் நீர்கசிந்து வெளியேறுகிறது.
பராமரிப்பு இல்லை
மேலும், குடியிருப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் குடிநீர் தொட்டி அருகே தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகள் போதிய பராமரிப்பு இல்லாமல் தேசம் அடைந்து, கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகிறது.
எதிர்பார்ப்பு
இதனால் அங்கு குடியிருந்து வரும் பலர் வீடுகளை காலி செய்து விட்டனர். தற்போது 54 குடியிருப்புகளில் மட்டுமே குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களும் போதிய பராமரிப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஆபத்தான நிலையில் உள்ள வீடுகள் மற்றும் குடிநீர் தொட்டியை சீர் செய்து, கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
Related Tags :
Next Story