கிருஷ்ணராயபுரம் அக்ரஹாரத்தில் சீதாராம கல்யாண மகா உற்வசம்


கிருஷ்ணராயபுரம் அக்ரஹாரத்தில் சீதாராம கல்யாண மகா உற்வசம்
x
தினத்தந்தி 13 July 2021 12:17 AM IST (Updated: 13 July 2021 12:17 AM IST)
t-max-icont-min-icon

சீதாராம கல்யாண மகா உற்வசம் நடந்தது.

கிருஷ்ணராயபுரம் 
கிருஷ்ணராயபுரம் அக்ரஹாரத்தில் ஆண்டுதோறும் சீதாராம கல்யாண மகா உற்வசம் வெகுவிமர்சையாக நடைபெறும். அதேபோல இந்தாண்டும் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 8-ந் தேதி கணபதி ஹோமம், மணி உற்சவம், உபயதாரர்கள் அர்ச்சனை போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 9-ந்தேதி லட்சார்ச்சனை பூர்த்தி, மகா தீபாராதனை மற்றும் திருவிளக்கு பூஜைகள், பஜனைப்பாடல்கள் நடைபெற்றது. நேற்று முன்தினம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சீதாராம கல்யாண மகா உற்சவம் நடைபெற்றது. இதில் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து ஹரி பஜனை, விசேஷ திவ்யநாமம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சீதாராம கல்யாணகமிட்டியினர் செய்திருந்தனர்.

Next Story