திண்டுக்கல் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊராட்சி பணியாளர்கள்


திண்டுக்கல் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊராட்சி பணியாளர்கள்
x
தினத்தந்தி 13 July 2021 12:28 AM IST (Updated: 13 July 2021 12:28 AM IST)
t-max-icont-min-icon

சம்பளம் கேட்டு திண்டுக்கல் ஒன்றிய அலுவலகத்தை ஊராட்சி பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 
இந்த நிலையில் அந்த ஊராட்சியின் மேல்நிலை குடிநீர் தொட்டி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் 30-க்கும் மேற்பட்டோர், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் கே.ஆர்.கணேசன் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது கொரோனா பரவலை பொருட்படுத்தாமல் பணியாளர்கள் வேலை செய்து வருகிறோம். ஆனால் கடந்த 3 மாதங்களாக முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் ஊராட்சி பணியாளர்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருகிறோம். எனவே சம்பளத்தை நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும் என்று பணியாளர்கள் கூறினர். 
இதுகுறித்து 2 நாட்களில் உரிய நடவடிக்கை எடுத்து சம்பளம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதிஅளித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு ஊராட்சி பணியாளர்கள் கலைந்து சென்றனர்.

Next Story