குமரியில் இன்று 20 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்


குமரியில் இன்று 20 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 13 July 2021 1:36 AM IST (Updated: 13 July 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் இன்று 20 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடக்கிறது.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இன்று 20 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடக்கிறது. 
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முகாம்
குமரி மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) 20 இடங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வயதினருக்குமான கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடக்கிறது. அதாவது செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், குருந்தன்கோடு, கிள்ளியூர், குழித்துறை, ஆறுதேசம், இடைகோடு, கோதநல்லூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
மேலும் குழித்துறை அரசு ஆஸ்பத்திரி மற்றும் வடிவீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் வெளிநாடு செல்வோருக்கான 2-வது டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த முகாம்களில் ஆன்லைன் மூலம் https://bookmyvaccine.kumaricovidcare.inஎன்ற இணையதளத்தில் டோக்கன் வழங்கப்படும்.
நேரடியாக டோக்கன்..
பூதப்பாண்டி, கன்னியாகுமரி, குளச்சல், சேனம்விளை, குழித்துறை, கருங்கல், அருமனை, குலசேகரம், பத்மநாபபுரம் ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளிலும், நாகர்கோவில் வேதநகர் புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளியிலும் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடக்கிறது. இந்த முகாம்களில் பொதுமக்களுக்கு நேரடியாக டோக்கன் வினியோகிக்கப்படுகிறது.
குமரியில் இதுவரை 8 லட்சத்து 43 ஆயிரத்து 265 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தற்போது 224 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். குமரியில் நேற்று முககவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் என 88 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story