சாலைகளில் சுற்றி திரிந்த 30 நாய்கள் பிடிபட்டன


சாலைகளில் சுற்றி திரிந்த  30 நாய்கள் பிடிபட்டன
x
தினத்தந்தி 13 July 2021 1:48 AM IST (Updated: 13 July 2021 1:48 AM IST)
t-max-icont-min-icon

சாலைகளில் சுற்றி திரிந்த 30 நாய்கள் பிடிபட்டன

நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சியில் தெரு நாய் தொல்லை அதிகமாக உள்ளது. அதிலும் தெரு நாய்கள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்துவதும், தெருக்களில் வீடுகளின் முன் விளையாடும் குழந்தைகளை கடிப்பதுமாக உள்ளது. எனவே தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 
அதாவது சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று மாநகரில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த 30 நாய்கள் பிடிபட்டன. பின்னர் அவை தோவாளையில் உள்ள நாய்கள் பராமரிப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, கருத்தடை செய்யப்பட்டது. கருத்தடை செய்யப்படும் நாய்கள் 3 நாட்கள் பராமரிப்பு மையத்திலேயே வைக்கப்படும். பின்னர் மீண்டும் பிடிபட்ட இடத்திலேயே விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story