கார் பட்டறை குடோனில் தீ
கார் பட்டறை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.
அயோத்தியாப்பட்டணம்
அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள சுக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சேர்ந்த வீரப்பன் மகன் சசிகுமார் (வயது 39). இவர் மாசிநாயக்கன்பட்டி பகுதியில் கார் பழுது பார்க்கும் பட்டறை நடத்தி வருகிறார். இதனால் கார் சம்பந்தப்பட்ட பொருட்கள், ஆயில், டீசல் உள்ளிட்ட பொருட்கள் தனது வீட்டின் அருகில் உள்ள குடோனில் வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் திடீரென குடோன் தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சசிகுமார் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். இருப்பினும் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் சேலம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
Related Tags :
Next Story