கொரோனா பாதிப்பு 91 ஆயிரத்தை தாண்டியது


கொரோனா பாதிப்பு 91 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 13 July 2021 1:55 AM IST (Updated: 13 July 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 91 ஆயிரத்தை தாண்டியது

சேலம்
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 175 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று 170 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 32 பேரும், சேலம் ஒன்றிய பகுதியில் 58 பேரும், ஆத்தூர் பகுதியில் 25 பேரும், நகராட்சி பகுதியில் 3 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். வெளி மாவட்டங்களில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு வந்த 52 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்து 43 ஆக அதிகரித்துள்ளது. 2 ஆயிரத்து 31 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவுக்கு பலியானார். இதன்மூலம் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,513 ஆக உயர்ந்துள்ளது.

Next Story