ஆட்டோ கண்ணாடி உடைப்பு; 2 பேர் கைது
அம்பை அருகே ஆட்டோ கண்ணாடியை உடைத்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அம்பை:
அம்பை அருகே கல்லிடைக்குறிச்சி கீழ்முக நாடார் தெருவைச் சேர்ந்த சுந்தர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ராஜமணி மகன் பாஸ்கர் (32) என்பவர் சுந்தர் வீட்டிற்கு முன்பாக மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனை சுந்தர் கண்டித்து கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கர் மற்றும் அவரது நண்பரான கபில்ராஜ் (27) ஆகிய 2 பேரும் சுந்தரின் மனைவி கனகாவை அவதூறாக பேசி, அங்கு வீட்டின் முன்பு நின்ற ஆட்டோவின் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கர், கபில்ராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story