அரிவாளை காட்டி மிரட்டி 4 வாலிபர்கள் கடத்தல்
திருச்சி பொன்மலையில் அரிவாளை காட்டி மிரட்டி 4 வாலிபர்களை கடத்திய 3 பேர் சிக்கினர்
பொன்மலைப்பட்டி
திருச்சி பொன்மலை தங்கேஸ்வரி நகரை சேர்ந்தவர் ரமேஷ்ராஜ். இவரது மகன் கார்த்திக் ராஜ்(வயது 22). இவர் தனது நண்பர்கள் ஆலிவர், ஆதி, மதன்குமார் ஆகியோருடன் கணேசபுரம் புதுத்தெரு பகுதியில் சில்லி சிக்கன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் அரிவாளை காட்டி மிரட்டி 4 பேரை கடத்திச் சென்று அவர்களிடம் இருந்த பணத்தையும், செல்போன்களையும் பறித்து சென்றனர். இதுகுறித்து பொன்மலை போலீசில் ரமேஷ்ராஜ் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் வழக்குப்பதிவு செய்து இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக பொன்மலை கணேசபுரத்தைச் சேர்ந்த பிரபு (33), சோனி என்கிற பரத் (23), செந்தில்குமார் (37) ஆகிய 3 பேரை கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து அரிவாள், இரும்பு கம்பி, பணம், இருசக்கர வாகனம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பி ஓடிய சூர்யாவை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story