ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக்கோரி சாலை மறியல்
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
துறையூர்
துறையூரை அடுத்துள்ள பெருமாள் மலை அடிவாரம் பகுதியில் 400 குடும்பங்களுக்கு மேலாக வசித்து வருகிறார்கள். இந்நிலையில் துறையூர் ஓங்காரக் குடில் பகுதியை சேர்ந்த ஒருவர் பெருமாள் மலை அடிவாரத்தில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்திற்கு பின்புறம் அரசுக்கு சொந்தமான நிலத்தில் கொட்டகை அமைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர் இறந்து விட்டார். அந்த இடத்தை மற்றொருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி துறையூர் தாசில்தார் அலுவலகத்தில் குன்னூபட்டி ஊராட்சியை சேர்ந்த 1-வது வார்டு உறுப்பினர் வீரக்குமார் மனு கொடுத்தார். ஆனால் அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று துறையூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் துறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story