பள்ளி ஆசிரியை வீட்டில் ரூ.15 லட்சம் தங்க, வைர நகைகள் கொள்ளை


பள்ளி ஆசிரியை வீட்டில் ரூ.15 லட்சம்  தங்க, வைர நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 13 July 2021 2:37 AM IST (Updated: 13 July 2021 2:37 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே ஆசிரியை வீட்டில் ரூ.15 லட்சம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன

கொள்ளிடம் டோல்கேட்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நெற்குப்பை கிராமத்தை சேர்ந்தவர் கடல்கன்னி (வயது 45). இவர் தஞ்சாவூர் மாவட்டம், எழுப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் இறந்துவிட்டதால் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு தஞ்சாவூரில் உள்ள தமிழ் பல்கலைக்கழகத்தின் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் சொந்தமாக மற்றொரு வீடு உள்ளது. இந்நிலையில் கடந்த 40 நாட்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு தஞ்சாவூரில் உள்ள வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார். அவ்வப்போது திருச்சியில் உள்ள வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.இந்நிலையில் திருச்சியில் உள்ள வீட்டிற்கு கடல்கன்னி வந்தபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ் மற்றும்  19 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.  இதுகுறித்து  அவர் கொள்ளிடம் நெ.1 டோல்கேட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.


Next Story