2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 13 July 2021 2:47 AM IST (Updated: 13 July 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நெல்லை:
நெல்லை அருகே உள்ள கட்டுடையார் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் என்ற கட்டையன் (வயது 24). இவர் அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நெல்லை அருகே உள்ள சீவலப்பேரியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (28). இவர் அங்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி நடந்த கோவில் பூசாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கலெக்டர் விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தார். அதை கலெக்டர் ஏற்று, மகேந்திரன், செல்லப்பாண்டி ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அதற்கான ஆணையை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Next Story