ரூ.13 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி தொடக்கம்
கடையம் அருகே ரூ.13 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
கடையம்:
கடையம் ஒன்றியம் முதலியார்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அந்த பள்ளி கட்டிடம் மிகவும் பழமையானது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள அந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தரவேண்டும் என்று ஞானதிரவியம் எம்.பி.யிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் அப்துல் ரகுமான் கோரிக்கை மனு ெகாடுத்தார். இதேபோன்று மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், தங்கள் பள்ளிக்கு மேலும் கட்டிடங்கள் தேவை எனவும் மனுக்கள் அளித்தார். இதைத்தொடர்ந்து முதலியார்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13 லட்சத்தை ஞானதிரவியம் எம்.பி. ஒதுக்கினார். இதையடுத்து அந்த பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. ஞானதிரவியம் எம்.பி. அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சிக்கு தி.மு.க. கடையம் ஒன்றிய செயலாளர் குமார், மாவட்ட மகளிரணி செயலாளர் செல்வி சங்கு கிருஷ்ணன், ஒன்றிய ஆணையாளர் முருகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கட்சியினர், ஜமாத்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story