ரெயில்வேயில் வேலை ரூ.30 லட்சம் மோசடி: பணத்தை திருப்பி கேட்டதால் துப்பாக்கியை காட்டி மிரட்டல் கூலிப்படையினர் கைது


ரெயில்வேயில் வேலை ரூ.30 லட்சம் மோசடி: பணத்தை திருப்பி கேட்டதால் துப்பாக்கியை காட்டி மிரட்டல் கூலிப்படையினர் கைது
x
தினத்தந்தி 13 July 2021 6:55 AM IST (Updated: 13 July 2021 6:55 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக ரூ.30 லட்சம் மோசடி செய்த பணத்தை திருப்பி கேட்டதால் துப்பாக்கி முனையில் மிரட்டியதாக 4 பேர் கைதாகினர்.

சென்னை, 

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் லியோ தாமஸ் பீட்டர். இவர் தனது உறவினர்களான சிவசக்தி, செல்வராஜ், பிரவீன் குமார் ஆகியோருக்கு ரெயில்வே துறையில் வேலை வாங்கி தரும்படி கூறி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி போகிபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநாத் (வயது 28) என்பவரிடம் ரூ.30 லட்சத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் ஸ்ரீநாத், 3 பேருக்கும் ரெயில்வே துறையில் வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் 4 பேரும் தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டனர். இதுதொடர்பாக திருச்சியில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் லியோ தாமஸ் பீட்டர், தனது உறவினர்களுடன் சென்று ஸ்ரீநாத்திடம் மீண்டும் பணத்தை தரும்படி கேட்டார். அதற்கு அவர், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் வரும்படி கூறினார்.

அதை நம்பி லியோ தாமஸ் பீட்டர், தனது உறவினர்கள் 3 பேருடன் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்கு காரில் கூலிப்படையினருடன் பதுங்கியிருந்த ஸ்ரீநாத், துப்பாக்கி மற்றும் கத்தி முனையில் லியோ தாமஸ் பீட்டர் தரப்பினரை மிரட்டினர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருவள்ளூர் போலீசார், ஸ்ரீநாத் மற்றும் கூலிப்படையை சேர்ந்த ராஜேஷ் எபினேசர் (41), ராஜ்குமார் (50), அரசு (34) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி, 13 தோட்டாக்கள், கத்தி மற்றும் ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Next Story