தண்ணீர் குடித்தபோது ‘பல்லை’ விழுங்கிய பெண் சாவு


தண்ணீர் குடித்தபோது ‘பல்லை’ விழுங்கிய பெண் சாவு
x
தினத்தந்தி 13 July 2021 12:04 PM IST (Updated: 13 July 2021 12:04 PM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் குடித்தபோது எதிர்பாராதவிதமாக புதிதாக பொருத்திய ‘பல்லை’ விழுங்கிய பெண் பரிதாபமாக இறந்தார்.

பல்லை விழுங்கினார்
சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரம், கே.பி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 48). இவருடைய மனைவி ராஜலட்சுமி (43). இவருக்கு 3 பற்கள் சேதமடைந்து இருந்தது. இதனால் கடந்த வாரம் அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு புதிதாக 3 பற்கள் பொருத்தப்பட்டது.நேற்று முன்தினம் ராஜலட்சுமி வீட்டில் தண்ணீர் குடித்தபோது, எதிர்பாராதவிதமாக அவருக்கு புதிதாக பொருத்தப்பட்டிருந்த 3 பல்லில் 2 பல் கழன்று தொண்டைக்குள் சென்றுவிட்டது. தண்ணீர் குடித்துக் கொண்டிருந்ததால் தன்னை அறியாமல் அந்த 2 பல்லையும் அவர் விழுங்கி விட்டதாக 
கூறப்படுகிறது.

உயிரிழந்தார்
இதனால் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு ‘ஸ்கேன்’ எடுத்து பார்த்ததில் எதுவும் தெரியவில்லை என்று கூறிவிட்டனர்.இதற்கிடையில் அவர் மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டு திடீரென மயங்கியதால் அவரை மீட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராஜலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து ராயலா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து புதிதாக பொருத்திய ‘பல்லை’ விழுங்கியதால் ராஜலட்சுமி உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்

Next Story