கோவில்பட்டியில் ஒரே நாளில் 1650 பேருக்கு கொரோனா தடுப்பூசி
கோவில்பட்டியில் ஒரேநாளில் 1650 பேருக்கு கொரானா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது
கோவில்பட்டி:
கோவில்பட்டி நகரில் பொது சுகாதாரம் நோய் தடுப்பு துறை, மற்றும் மக்கள் உரிமைக்கான அமைப்பு ஏற்பாட்டில் கடலையூர் ரோட்டிலுள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் அருகில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடத்தப் பட்டது. முகாமை மக்கள் உரிமைக்கான அமைப்பு தென்மண்டல ஒருங்கிணைப் பாளர் ஸ்ரீதரன் தொடங்கி வைத்தார். முகாமில் டாக்டர் மனோஜ் தலைமையில் மருத்துவ குழுவினர் 210 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். கோவில்பட்டி நகரில் நேற்று மேலும் 9 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாம்களில் 1440 பேருக்கு தடுப்பூசி போடப் பட்டது. நிகழ்ச்சியில் வக்கீல்கள் விஜயபாஸ்கரன், ராமச்சந்திரன், கோபி, சங்கர் கணேஷ், சண்முக சுந்தரம், சிவன் பாண்டி, ரவிசங்கர், நீதிபாண்டியன், சத்ய நாராயணன், மகேஷ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story