9 முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்காக பள்ளிக்கூடங்களை விரைவில் திறக்க நடவடிக்கை
9 முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்காக பள்ளிக்கூடங்களை விரைவில் திறக்க நடவடிக்கை தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தகவல்.
சென்னை,
தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் டி.சி.இளங்கோவன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளிக்கூடம் திறப்பது பற்றியும், கட்டண நிர்ணயக்குழு குறித்தும் அமைச்சரிடம் பேசி இருக்கிறோம். கடந்த 1½ ஆண்டுகளாக ஆன்லைனில் வகுப்புகளை நடத்தி வருகிறோம். 20 சதவீத மாணவர்கள்தான் முழுமையான கல்வியை இதன்மூலம் பெறுகிறார்கள். ஆன்லைன் வகுப்பை பொறுத்தவரை, அனைத்துதரப்பு மாணவர்களையும் சென்றடையவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகத்தான் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறோம்.
மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு வரவேண்டும். ஆசிரியர்களோடு வகுப்பறையில் கற்றுக்கொள்ளும் பாடங்கள்தான் முழு அளவில் சென்றடையும். இதைத்தான் பள்ளிக்கல்வி அமைச்சரிடம் வலியுறுத்தி இருக்கிறோம்.
முதல்-அமைச்சரோடு விரைவில் பேசி, 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்காக பள்ளிக்கூடங்களை திறக்க ஆவன செய்வதாக அவர் கூறினார். ஒரு நாளைக்கு 2 மணி நேரமாவது மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு வந்து போக வேண்டும் என்றும், அதேபோல் ‘ஷிப்டு’ அடிப்படையில் ஒரு நாள் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களையும், மற்றொரு நாள் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களையும் பள்ளிக்கு வரவழைக்கலாம் என்றும், நாங்கள் சொல்லி இருக்கிறோம். எல்லாவற்றையும் பேசி முடிவு செய்யலாம் என்று அமைச்சர் சொன்னார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story