நிலக்கரி இறக்குமதி ஊழலை தடுக்க கோரிய வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி
நிலக்கரி இறக்குமதி ஊழலை தடுக்க கோரிய வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி.
சென்னை,
தமிழகத்தில் மின் வாரியத்துக்கு ரூ.ஆயிரத்து 330 கோடி மதிப்பில் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய டெண்டர் அறிவிக்கப்பட்டது. இந்த டெண்டரில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதால், ஊழலைத் தடுக்க வருவாய் புலனாய்வு இயக்குனரக தலைவர், மத்திய ஊழல் தடுப்பு ஆணையர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் ஆகியோர் அடங்கிய கூட்டு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று செல்வராஜ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நிலக்கரி இறக்குமதி தொடர்பாக வெளியிடப்பட்ட டெண்டர் திரும்பப்பெறப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், டெண்டரை திரும்பப் பெற்றதால், இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story