தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்துபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்துபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் என போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்துபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் என போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கஞ்சா கடத்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தலை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டில் இதுவரை கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 223 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கஞ்சா வழக்கில் ஈடுபட்ட 8 பேர் உள்பட 93 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
குண்டர் சட்டத்தில்...
அதே போன்று தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 763 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 773 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 72 ஆயிரம் கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுபோன்று போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story