உடுமலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பொது மக்கள் கூட்டம் அலைமோதியது


உடுமலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பொது மக்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 13 July 2021 9:40 PM IST (Updated: 13 July 2021 9:40 PM IST)
t-max-icont-min-icon

உடுமலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பொது மக்கள் கூட்டம் அலைமோதியது

உடுமலை:
உடுமலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பொது மக்கள் கூட்டம் அலைமோதியது. சிலர் மழையில் குடைபிடித்தபடி நின்றிருந்தனர்.
தடுப்பூசி முகாம்கள்
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை பரவி வரும் நிலையில் 3-வது அலை வர உள்ளதாக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 
அதன்படி பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அரசு வலியுறுத்தி வருகிறது. சமீபகாலமாக நகர பகுதியில் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து வாக்குச்சாவடி மையங்களில் (பள்ளிகள்) தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் நேற்று உடுமலை நகராட்சி பகுதியில் சதாசிவம் வீதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி, தாராபுரம் சாலையில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் தலா 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
 மலையாண்டிபட்டிணம்
இதேபோன்று உடுமலையை அடுத்துள்ள குரல்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் இந்த ஊராட்சிக்குட்பட்ட மலையாண்டிபட்டிணத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களிலும் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடந்தது.
இந்த முகாம்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு அதிகாலையிலேயே பொதுமக்கள் வந்து காத்திருந்தனர். இந்த 2 இடங்களில் நடந்த முகாம்களிலும் தலா 200 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டது.
திடீர் மழை
பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது திடீரென்று மழை பெய்ததால் பொதுமக்கள் பள்ளியின் திண்ணைக்கு சென்று நின்றனர். அங்கு திண்ணையில் இடவசதி குறைவாக இருந்ததால் பொதுமக்கள் சமூக இடைவெளி இல்லாமல் நெருக்கமாக நின்றிருந்தனர்.
குடை வைத்திருந்த சிலர் பள்ளிக்கு முன்பு குடைகளை பிடித்துக்கொண்டு வரிசையில் நின்றிருந்தனர். மழையிலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 
மேலும் கொரோனா தடுப்பூசி போடும் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story