உடுமலையில் பா.ஜனதா கட்சி பதாகை கிழிப்பு
உடுமலையில் பா.ஜனதா கட்சி பதாகை கிழிப்பு
உடுமலை:-
மத்திய இணை மந்திரியாக எல்.முருகன், பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவராக கே.அண்ணாமலை ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். இதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து உடுமலையில் பாரதீய ஜனதா கட்சி சார்பில், கட்சி நிர்வாகிகள், மத்திய பஸ்நிலையம் முன்பு, பழைய பஸ்நிலையம்பகுதி, தளிசாலையில் உள்ள குட்டைத்திடல் பகுதி உள்ளிட்ட இடங்களில் விளம்பர பதாகைகளை (பிளக்ஸ் பேனர்)வைத்துள்ளனர். இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் உடுமலை பழைய பஸ்நிலையம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையில் நிர்வாகிகள் 3 பேருடைய படங்களை மர்ம ஆசாமிகள் கிழித்து அகற்றியுள்ளனர்.
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story