பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா டிக்கெட் வினியோகம்
பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா டிக்கெட் வினியோகம்.
சென்னை,
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் 5 உத்தரவுகளில் கையெழுத்திட்டார். அதில் போக்குவரத்து கழக பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் செய்வதற்கான உத்தரவும் ஒன்றாகும். இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்படி, சாதாரண கட்டண பஸ்களில் பெண்கள் இலவச பயண சேவையை பெற்று வருகிறார்கள்.
இந்த சேவையால் தினந்தோறும் பெண்கள் எத்தனை பேர் பயனடைகிறார்கள்? என்ற விவரம் சரிவர தெரியாமலேயே இருந்து வந்தது. ஏனெனில் பஸ்களில் பயணிக்கும் பெண்களுக்கு இலவச பயணத்துக்கான டிக்கெட் எதுவும் கொடுக்கப்படவில்லை. இதையடுத்து பெண்களுக்கு இலவச பயணத்தை உறுதி செய்யும் டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான புதிய திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் சாதாரண கட்டண பஸ்களில் பயணம் செய்யும் பெண்களுக்கு இலவச பயணத்துக்கான டிக்கெட் நேற்று முதல் வழங்கப்பட்டது. அந்த டிக்கெட்டில் ‘மகளிர் - கட்டணமில்லா பயணச்சீட்டு’ என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ்களில் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக அவர்களுக்கும் பிரத்யேக டிக்கெட்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story