திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எரியோடு, நாகையகோட்டை, புதுரோடு, வெல்லம்பட்டி, பாகாநத்தம், குண்டாம்பட்டி, கோட்டைகட்டியூர், சவடகவுண்டன்பட்டி, மல்வார்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சனம்பட்டி, தண்ணீர்பந்தம்பட்டி, தொட்டணம்பட்டி, நல்லமனார்கோட்டை, குளத்தூர், கொசவபட்டி, சூடாமணிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை எரியோடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.
இதேபோல் வேடசந்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வேடசந்தூர், நாகம்பட்டி, காளனம்பட்டி, நத்தப்பட்டி, தட்டாரபட்டி, சுள்ளெறும்பு, நவாலூத்து, அம்மாபட்டி, பூவாய்பாளையம், பூத்தாம்பட்டி, குருநாதநாயக்கனூர், அம்மாபட்டி, மாரம்பாடி, முருநெல்லிக்கோட்டை, சேனான்கோட்டை, ஒட்டநாகம்பட்டி, கோடாங்கிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று வேடசந்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.
ரெட்டியார்சத்திரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி மாங்கரை, அம்மாபட்டி, ரெட்டியார்சத்திரம், சில்வார்பட்டி, கே.புதுக்கோட்டை, தாதன்கோட்டை, அணைப்பட்டி, பாலம் ராஜக்காபட்டி, கதிரையன்குளம், எல்லப்பட்டி, ஸ்ரீராமபுரம், முத்தனம்பட்டி, வெயிலடிச்சான் பட்டி, பங்காருபுரம், பழக்கனூத்து, நீல மலைக்கோட்டை ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று ரெட்டியார்சத்திரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) மணிகண்டன் தெரிவித்தார்.
காந்திகிராமத்தில் உள்ள கீழக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடைபெற உள்ளதால் சின்னாளப்பட்டி, காந்திகிராமம், அம்பாத்துரை, கோட்டைப்பட்டி, செட்டியபட்டி, எல்லப்பட்டி, கல்லுப்பட்டி, வளையப்பட்டி, வேளாங்கண்ணிபுரம், சிறுமலை, பெருமாள்கோவில்பட்டி, முருக்கம்பட்டி, சாதிகவுண்டன்பட்டி, சாமியார்பட்டி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று சின்னாளப்பட்டி உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story