காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட 29 பேர் மீது வழக்கு


காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட 29 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 13 July 2021 10:31 PM IST (Updated: 13 July 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் அனுமதியின்றி ஊர்வலம் நடத்திய காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட 29 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசராணை நடத்தி வருகின்றனர்.

கம்பம்: 

கம்பத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று முன்தினம் மாட்டுவண்டி மற்றும் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. 


தற்போது கொரோனா தொற்று பரவும் நேரத்தில், அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியதாக போலீசில் புகார் கூறப்பட்டது. அதன்பேரில் ஊர்வலம் நடத்திய காங்கிரஸ் மாவட்ட தலைவர் முருகேசன், நகர தலைவர் போஸ், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் சத்தியமூர்த்தி உள்பட 29 பேர் மீது கம்பம் வடக்கு மற்றும் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story