தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் புதிய அலுவலக திறப்பு விழா
தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் புதிய அலுவலக திறப்பு விழா
தாராபுரம்
தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் புதிய அலுவலக திறப்பு விழா கண்ணன் நகரில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றினார். சட்டமன்ற அலுவலகத்தை தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்து பேசுகையில், பொதுமக்களின் குறைகளை கேட்டு அறியவும், சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சந்திக்கவும் வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற கயல்விழி செல்வராஜ் எம்.எல்.ஏ. ஆகி அவருக்கு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கண்ணன் நகர் சட்டமன்ற அலுவலகம் கட்டப்பட்டது. அவை பராமரிப்பின்றி கடந்த 10 ஆண்டு காலமாக இருந்து வந்தது. இதனை புதுப்பித்து புதிய அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது. இனி பொதுமக்கள் தங்கள் குறைகளை அலுவலகத்தில் மனுக்கள் மூலமாக கொடுக்கலாம் என்று கூறினார்.
அப்போது தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், தாராபுரம் நகர செயலாளர் கே.எஸ்.தனசேகர், ஒன்றிய செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார், மூலனூர் பேரூராட்சி செயலாளர் தண்டபாணி, கொளத்துப்பாளையம் பேரூராட்சி செயலாளர் கே.கே.துரைசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சன்பாலு, நகர இளைஞரணி அமைப்பாளர் முருகானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story