குடிமங்கலம் அருகே பணபலன்கள் கேட்டு நூற்பாலை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடிமங்கலம் அருகே பணபலன்கள் கேட்டு நூற்பாலை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
x
தினத்தந்தி 13 July 2021 10:43 PM IST (Updated: 13 July 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

குடிமங்கலம் அருகே பணபலன்கள் கேட்டு நூற்பாலை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடிமங்கலம், 
குடிமங்கலம் அருகே பணபலன்கள் கேட்டு நூற்பாலை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொழிலாளர்கள் போராட்டம்
குடிமங்கலம் அருகே பொன்னேரியில் தனியாருக்கு சொந்தமான ‘பேட்ஸ் பின் இந்தியா’ என்ற பெயரில் நூற்பாலை உள்ளது. இங்கு குடிமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 
நூற்பாலையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிகொடை, காப்பீடு இவற்றிற்காக தொழிலாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பங்களிப்பு தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது
பேச்சுவார்த்தை
பொன்னேரியில் செயல்பட்டுவரும் ஆலை வேறு நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அறிந்த தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணபலன்களை வழங்க வேண்டும் என்று நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். நிர்வாகத்தினர் முறையான பதில் அளிக்காததால் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த உடுமலை தாசில்தார் ராமலிங்கம், குடிமங்கலம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் தொழிலாளர்கள் மற்றும் ஆலை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் ஆலை நிர்வாகம் தொழிலாளர்களின் பணபலன்கள் முழுமையாக வழங்கப்படும் என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

Next Story