தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி நூதன போராட்டம்

புதுக்கோட்டை, ஜூலை.14-
புதுக்கோட்டை நகராட்சியில் ஒப்பந்த மற்றும் நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு சம்பள நிலுவை தொகையை வழங்க வேண்டும், ஏற்கனவே பேச்சுவார்த்தையின் போது அளித்த உறுதியினை நிறைவேற்ற வேண்டும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக தூய்மை தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று நூதன போராட்டம் நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத்திற்கு சம்பளம் போடுவதற்கு வசதியாக கட்டிடத்தை ஏலம் விட்டு, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து சம்பளம் போட வசதியாக இருக்கும் என அறிவித்து ஏலம்விட்டனர். ஏலத்தொகை ரூ.10 கோடி வரை கேட்கப்பட்டது. மேலும் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் விடுதலை குமரன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story