வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு


வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 13 July 2021 11:21 PM IST (Updated: 13 July 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு நடைபெற்று உள்ளது.

காரைக்குடி,

காரைக்குடி என்.ஜி.ஓ.காலனியை சேர்ந்தவர் செந்தில். கட்டிட ஒப்பந்ததாரர். இந்த நிலையில் அவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு சென்னை சென்றிருந்தார். அப்போது இவரது வீட்டின் அருகில் இருப்பவர்கள் செல்போன் மூலம் செந்திலை தொடர்பு கொண்டு உங்களது வீட்டின் கதவுகள் திறந்து கிடக்கிறது என கூறியுள்ளனர். அதனால் காரைக்குடி வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு திறந்து. கிடந்தது. வீட்டினுள் பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன. வீட்டில் இருந்த 10 பவுன் நகைகளை காணவில்லை. மர்ம ஆசாமிகள் பூட்டிய வீட்டை கதவை உடைத்து நகையை திருடி சென்று இருக்கிறார்கள். இது குறித்து செந்தில் குன்றக்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story