திருப்பத்தூர் மாவட்டத்தில் 17 ஏக்கரில் கால்நடை தீவன பயிர்கள் வளர்க்க நடவடிக்கை
திருப்பத்தூர் மாவட்டத்தில் 17 ஏக்கரில் கால்நடை தீவன பயிர்கள் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடைதறை உதவி இயக்குனர் டாக்டர் நாசர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட கால்நடைதறை உதவி இயக்குனர் டாக்டர் நாசர் கூறியதாவது:-
கால்நடை தீவன அபிவிருத்தி திட்டம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கால்நடை தீவன உற்பத்தி கடந்த காலங்களை விட 50 சதவீதம் குறைந்து விட்டது. இதனால் கால்நடைகளுக்கு பெருமளவில் பாதிப்பு உண்டாக வாய்ப்பு உள்ளது. இதனை தவிர்க்க மாவட்டத்தில் கால்நடை தீவன அபிவிருத்தி திட்டம் கடந்த ஆண்டுகளில் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டது.
அதன்படி 2021-2022-ம் ஆண்டிலும் இந்த தீவன உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை கால்நடை பராமரிப்புத் துறை மேற்கொண்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் குரும்பேரி கிராமத்தில் 17.5 ஏக்கர் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
தீவன பயிர்
இங்கு வேளாண்மைதுறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மை பொறியியல் துறை, வனத்துறை உள்ளிட்ட துறைகள் மூலம் நிலத்தை சமன் செய்து நிலங்களில் தீவனசோளம், கம்பு மக்காச்சோளம், கம்பு நேப்பியர், ஒட்டுப்புல், கினியா புல், கொழுக்கட்டை புல், குதிரை மசால், வேலி மசால், முயல் மசால், சவுண்டல் போன்ற கால்நடை தீவனப் பயிர்களை பயிரிட்டு 100 நாள் வேலை திட்டம் மூலம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் விளையும் தீவனங்களை கால்நடை வளர்ப்பவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் கால்நடை தீவன உற்பத்தி, மற்றும் கால்நடைகள் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story