விதை சட்டங்களை மீறினால் கடும் நடவடிக்கை-விற்பனையாளர்களுக்கு அதிகாரி எச்சரிக்கை
விதைச்சட்டங்களை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விற்பனையாளர்களுக்கு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கை,
விதைச்சட்டங்களை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விற்பனையாளர்களுக்கு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விலை விவர பட்டியல்
மாவட்ட விதை விற்பனையாளர்கள் தங்களது கடையில் கண்டிப்பாக விதை இருப்பு விவர பலகை மற்றும் விலை விவரப்பட்டியல் ஆகியவற்றை விவசாயிகள் பார்வையில் படும்படி வைத்து பராமரிக்க வேண்டும். மொத்த விற்பனையாளர்களிடமிருந்து விதைகள் வாங்கும்போது, அதற்கு உரிய படிவம் -2 ஐ பெற வேண்டும்.
மேலும் சான்று பெற்ற விதைகளின் கொள்கலன்களில் சீலிடப்பட்ட ஈய வில்லைகள் பொருத்தப்பட்டுள்ளதா? என்பதை சரி பார்த்து வாங்க வேண்டும். மேலும் விதை விவர அட்டையில் பயிர், ரகம், குறைந்தபட்ச முளைப்புத்திறன் சதவீதம், விதைத்தூய்மை சதவீதம், இனத்தூய்மை சதவீதம், சோதனை நாள், காலாவதி தேதி, பரிந்துரைக்கப்படும் பருவகாலம், விதைப்புக்கு ஏற்ற பகுதி முதலிய விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆதார விதைகள் வெண்மைநிறச்சான்று அட்டையுடனும், சான்று விதைகள் நீல நிறச் சான்று அட்டையுடனும் உள்ளதா? என்பதையும் சரி பார்க்க வேண்டும்.
கடும் நடவடிக்கை
விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்யும் போது சம்பந்தப்பட்ட பயிர் ரகத்தின் குவியல் எண் மற்றும் காலாவதி நாள் ஆகியவற்றை குறிப்பிட்டு, விலைப்பட்டியல் உடனுக்குடன் வழங்க வேண்டும்.
இந்த அறிவுரைகளை பின்பற்ற தவறும் பட்சத்தில் விற்பனையாளர்கள் மீது விதைச்சட்டம் 1966, விதை விதிகள் 1968, விதைக்கட்டுப்பாட்டு ஆணை 1983 ஆகியவற்றின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story