வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள திருவெங்கனூரை சேர்ந்தவர் சுரேஷ். இவர் சம்பவத்தன்று தனது சைக்கிளில் முடிகொண்டான் பஸ் நிலையம் அருகே சென்றபோது வடுகபாளையத்தை சேர்ந்த புலித்தேவன் (வயது 23) கத்தியைக் காட்டி மிரட்டி, சுரேசிடம் இருந்து ரூ.7 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார். இது குறித்து திருமானூர் போலீஸ் நிலையத்தில் சுரேஷ் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சகாய அன்பரசு தலைமையில் தனிப்படை அமைத்து புலித்தேவனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இந்நிலையில் புலித்தேவன் மேலும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடும், பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடும் என்ற காரணத்தினால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு, அரியலூர் உட்கோட்ட துணை சூப்பிரண்டு மதன் ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லாவுக்கு பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டின் பரிந்துரையை ஏற்ற அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் புலித்தேவனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story