பிரம்மபுரீசுவரர் கோவிலில் குருபூஜை விழா


பிரம்மபுரீசுவரர் கோவிலில் குருபூஜை விழா
x
தினத்தந்தி 14 July 2021 12:04 AM IST (Updated: 14 July 2021 12:04 AM IST)
t-max-icont-min-icon

பிரம்மபுரீசுவரர் கோவிலில் குருபூஜை விழா நடைபெற்றது.

பெரம்பலூர்:
பெரம்பலூரில் உள்ள பிரசித்தி பெற்ற அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீசுவரர் கோவிலில் வார வழிபாட்டு மன்றம் சார்பில் 63 நாயன்மார்களில் ஒருவரான மாணிக்கவாசகர் குருபூஜை விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு கோவில் பிரகாரத்தில் உள்ள திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் சேக்கிழார் சன்னதியில் ஐவரின் திரு உருவ சிலைகளுக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் பால், பழங்கள், இளநீர், தேன், வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களும், மகாதீபாராதனையும் நடந்தது. அபிஷேக, ஆராதனையை திருச்செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியார் மற்றும் கோவில் அர்ச்சகர் கவுரிசங்கர் ஆகியோர் நடத்தினர். அப்போது தெய்வீக பேரவை இறைநெறிக்கழகம் மற்றும் தின வழிபாட்டு மன்றத்தினர் மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம், திருக்கோவையார், திருவெம்பாவை, சிவபுராண பதிகங்களை பாடி பாராயணம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.  விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார், செயல் அலுவலர் மற்றும் ஆன்மீக மெய்யன்பர்கள் செய்திருந்தனர்.

Next Story