ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 July 2021 12:38 AM IST (Updated: 14 July 2021 12:38 AM IST)
t-max-icont-min-icon

சேத்தூர் பஸ் நிலையம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தளவாய்புரம், 
சேத்தூர் பஸ் நிலையம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி தலைமை தாங்கினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும், சேத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை இடம் மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.பி. லிங்கம், இளைஞர் பெருமன்ற மாவட்ட பொருளாளர் பகத்சிங், ஒன்றிய செயலாளர் வைரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story