மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு


மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 14 July 2021 12:42 AM IST (Updated: 14 July 2021 12:42 AM IST)
t-max-icont-min-icon

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் செவ்வாய்க்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

சாத்தூர், 
சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் செவ்வாய்க்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக அம்மனுக்கு அதிகாலை முதல் பால், பன்னீர், தேன், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர். கொரோனா விதிகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கோவில் செயல் அலுவலர் உதவி ஆணையர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர் ராமமூர்த்திபூசாரி, அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Next Story