ஆர்ப்பாட்டம்
வத்திராயிருப்பில் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பில் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்திற்கு தடையின்றியும், காலதாமதம் ஏற்படுத்தாமலும் கொரோனா தடுப்பூசியை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் கோவிந்தன், தாலுகா துணைச்செயலாளர் மகாலிங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் சேர்வை, நகர செயலாளர் பிச்சைமணி, இளைஞர் பெருமன்ற தலைவர் சுருளி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல சிவகாசி, கீழராஜகுலராமன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story