ஆதார் சேவை மையத்தில் திருத்தம் செய்ய காத்திருக்கும் மக்கள்


ஆதார் சேவை மையத்தில் திருத்தம் செய்ய காத்திருக்கும் மக்கள்
x
தினத்தந்தி 14 July 2021 12:50 AM IST (Updated: 14 July 2021 12:50 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை ஆதார் சேவை மையத்தில் கூடுதல் பணியாளர்கள் இல்லாததால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை ஆதார் சேவை மையத்தில் கூடுதல் பணியாளர்கள் இல்லாததால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. 
ஆதார் சேவை மையம் 
அருப்புக்கோட்டை தாசில்தார் அலுவலக வளாகத்தில்  ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதார் கார்டு விண்ணப்பித்தல் மற்றும் திருத்தம் செய்ய தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வருகின்றனர். இவர்களுக்கு ேடாக்கன் வழங்கப்பட்டு டோக்கன் முறையில் தான் அவர்களது குறைகள் நிவர்த்தி செய்யப்படுகிறது. 
 டோக்கன் தினமும் குறைவான அளவில் தான் வழங்கப்படுகிறது. ஆதலால் காலை 7 மணி முதல் 10 மணி வரை பலர் டோக்கன் பெற வரிசையில் நின்றிருந்து டோக்கன் கிடைக்காமல் ஏமாந்து செல்கின்றனர். 
இணைய தளம் 
மேலும் ஆதார் சேவை மையத்தில் இணையதள வேகம் குறைவாக உள்ளதால் சில நேரங்களில் திருத்தங்கள் செய்ய முடியாத நிலை உள்ளது. 
ஒரே ஒருவர் மட்டுமே திருத்தங்கள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதால் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆதார் கார்டு தேவை என்பதால் தற்போது மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் பலன் கிடைக்காத சூழ்நிலை உள்ளது. 
 எனவே கூடுதலாக ஆதார் சேவை மையம் ஏற்படுத்த வேண்டும், இல்லை என்றால் இணையதள வேகத்தை அதிகரித்து கூடுதல் பணியாளர்களை நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story